Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்… குவியும் லைக்குகள்…!!!

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல்.  கடந்த 2015-ஆம் ஆண்டு இவர் ஷைலாதித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் முதல்முறையாக தனது மகனின் முகம் தெரியும் அளவுக்கு உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது மகன் பேசுவது போன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CWj8DsHK4jl/?utm_source=ig_embed&ig_rid=5805fc64-efca-4fa6-866f-16ad12379cb5

அதில் ‘எல்லோருக்கும் வணக்கம். நான் தேவ்யன் மற்றும் எனக்கு இன்று 6 மாதங்கள். தற்போது நான் என்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராய்வதிலும், எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்பதிலும், எல்லாவிதமான படங்களுடன் கூடிய புத்தகங்களைப் படிப்பதிலும், வேடிக்கையான நகைச்சுவைகளைப் பார்த்து சத்தமாகச் சிரிப்பதிலும், என் அம்மாவுடன் ஆழ்ந்த உரையாடல்களிலும் மும்முரமாக இருக்கிறேன். என் அம்மா என்னை கவனமாக பார்த்துக்கொள்கிறார். உங்கள் அன்பையும், ஆசீர்வாதத்தையும் எனக்கு அனுப்பிய அனைவருக்கும் நன்றி’ என குறிப்பிடத்துள்ளது. தற்போது இந்த அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |