Categories
தேசிய செய்திகள்

முதல்முறையாக நஷ்டம்….. அமேசானுக்கே இந்த நிலைமையா?…..  அதிர்ச்சியில் பங்குதாரர்கள்….!!!

அமேசான் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது அமேசான் நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்த அமேசான் நிறுவனம் தற்போது எதிர்பாராத வகையில் திடீரென்று இழப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து அமேசான் பங்கு விலை சரிந்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் அமேசான் நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருகிறது. முதல் முறையாக கடந்த மார்ச் காலாண்டில் அமேசான் நிறுவனம் 384 கோடி டாலர் இழப்பை சந்தித்துள்ளது. இது அமேசன் பங்குதாரர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அமேசான் பங்கு விலை தடாலடியாக 9 சதவீதம் சரிந்து, ஒரு பங்குக்கு 7.56 டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழிலில் விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளது.   நெட்பிளிக்ஸ், மெக்டானல்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமேசன் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்கி வருகிறது. இதில் அமேசானின் விளம்பரத் தொழில் விற்பனை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

Categories

Tech |