பாஜக அண்ணாமலையின் தொடர் விமர்சனத்திற்கு முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலினிடம், அரசு ரகசியமாக வைத்திருக்கும் சில விஷயங்கள் எப்படி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரிகிறது என்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என பதிலளித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
Categories