தொகுப்பாளர் ரக்ஷன் விருது விழாவிற்கு தனது மனைவியுடன் வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்சன். இதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ரக்சன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
சமீபத்தில் தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பது பற்றி ரக்சன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் டிவி டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ரக்சன் முதல் முறையாக தனது மனைவியுடன் வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.