Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Gautham Menon onboard Vetri Maaran's Viduthalai?- Cinema express

இந்நிலையில் விடுதலை படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் கௌதம் மேனன் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலை படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |