தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டையும் வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி தென்காசி செல்கிறார். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலமாக தென்காசி பயணம் மேற்கொள்கின்றார்.
அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 8.40 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி செல்கிறார். இதற்காக அந்த ரயிலில் தனிப்பெட்டி இணைக்கப்பட உள்ளது. நகரும் வீடு என்று அழைக்கப்படும் இந்த பெட்டியில் இரண்டு படுக்கை அறைகள், ஏசி வசதி, மினி மீட்டிங் ஹால், பிரிட்ஜ், டைனிங் ஹால், வெந்நீர் தொட்டி மற்றும் சமையலறை என சகல வசதிகளும் இருக்கும். இது ரயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.