செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்க இணைந்து போராடவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? என்று கேட்ட டிடிவி தினகரனிடம், அதற்க்கு சசிகலா உங்களுக்கு ஆதரவாக இருப்பார்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்க்கு இதை அவர்களிடம் கேட்க வேண்டும், எங்க சித்தி ஆதரவாக இருக்காங்க என்று நான் சொல்வது எப்படி ? உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகம் செய்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், உலகறிந்த விஷயம் தான். இதைப்போய் நான் சொல்லித்தான் தெரியனுமா ?
அப்போ நீங்கள் என்ன சொல்வீர்கள் இவர்கள் தோற்றுவிட்டார் அதனால சொல்கிறார்கள் என்று, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் என்கின்ற மாதிரி… அவங்க ஆதரவு இருக்கா என்ற கேள்வியே நான் தவறு என்று நினைக்கிறேன். அவங்க எங்க கூட இருக்கிறவர்கள் தானே, இந்த கேள்வி எப்படி உங்களுக்கு தோன்றுகிறது என்று தெரியவில்லை,
முதலில் அவங்க எங்க சித்தி. எங்களுடைய மீட்டெடுப்பு என்பது ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன் ஜனநாயக ரீதியாக நாங்கள் அதை வெற்றி பெற்று தேர்தல் வெற்றியில் தான் மீட்டெடுக்க முடியும், அதனால் அடுத்த தேர்தலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொன்னேன். அதனால் அங்கு இருக்கிறவர்கள் தொடர்பு இருக்கலாம், இல்லையா ? என்பதெல்லாம் பேச தேவையில்லை, நண்பர்களாக கூட சில பேர் பழகலாம், அரசியல் ரீதியாக வேறு கட்சியில் இருக்கலாம். அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது, அதே மாதிரி அவர்களுடைய ஆதரவு இருக்கா ? அப்படி என்பது உங்களுக்கே தெரியும்.
எங்க சின்னம்மா உடைய ஆதரவு எனக்கு இருக்கா ? இல்லையா அப்படிங்குறது. முதலில் அவர்கள் எங்களுடைய சித்தி, அதுக்கப்புறம்தான் அரசியல் எல்லாம். அந்த உறவு எப்பவுமே நல்லா தான் இருக்கு. அவங்க பொதுச் செயலாளர் என்ற முறையில் வழக்கு போட்டு இருக்காங்க. நான் வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கிவிட்டேன். ஏனென்றால் நான் ஒரு கட்சி ஆரம்பித்தேன் அவ்வளவு தானே தவிர… எங்களுடைய இலக்கு ஒன்றுதான் என தெரிவித்தார்.