Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல அப்படி சொன்னாரு…! இப்போ இப்படி சொல்லுறாரு… உங்க பாச்சா பலிக்காது… பொளந்து கட்டிய தமிழக முதல்வர் …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமியுடைய அரசு பத்து நாட்கள் தாங்காது என ஸ்டாலின் வெளியில் பேசினார், பொதுக்கூட்டத்தில் பேசினார், பத்திரிக்கையிலே ஊடகத்திற்கு செய்தி கொடுத்தார்.

ஒரு மாதம் தாங்காது, மூன்று மாதம் தாங்காது, ஆறு மாதம் தாங்காது என்றார் இப்பொழுது நாலு ஆண்டு காலம் நிறைவு பெற்று, ஐந்தாண்டு காலம் தொடர இருக்கின்றது ஸ்டாலின் அவர்களே…  ஸ்டாலின் இப்பொழுது ஆரம்பித்துவிட்டார். இன்னும் மூன்று மாதத்தில் திமுக ஆட்சிக்கு வருமா ?

நீ ஏற்கனவே இப்படி தான் சொல்லிட்டு இருந்திங்க.  .நான்கு வருஷமா இதே தான் பாட்டு பாடிக்கிட்டு  இருக்கீங்க. இந்த தேர்தல் முடிஞ்ச பிறகும் இதே பாட்டத்தான் நீ பாடப்போற. மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு வெற்றியை கொடுப்பது இல்லை என்று தீர்மானித்து விட்டார்கள். நான் வெளிநேடுக்கிலும் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். இங்கே ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துருக்கணும். ஒரு மணிநேரம் காலதாமதமாக வந்துருக்கேன்.

வழிநெடுகிலும் மக்கள் கூட்டம், மக்கள் எழுச்சியை பார்க்கிறோம். அந்த எழுச்சி இன்றைக்கு ஆட்சி வருவதற்கு ஒரு முன்னோடியாக  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அதனால் ஸ்டாலின் அவர்களே… நீங்க எத்தனை வேடம் போட்டாலும் உங்க பாச்சா பலிக்காது. உங்களுடைய வேடம் எல்லாம் கலைந்துவிட்டது. நடிப்பெல்லாம் கலைந்துவிட்டது. உங்களின் உண்மையான உருவத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என தமிழக முதல்வர் விமர்சனம் செய்தார்.

Categories

Tech |