Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்ல இதை செய்வோம்…! பிறகு அதை பாத்துக்கலாம்… அதிமுக கொடுத்த உறுதி…! முதல்வர் வீட்டுக்கு போகும் ராமதாஸ் …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை கையிலெடுத்து, ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணியில் தொடர முடியும் என்று பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார், பின்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இறங்கி வந்ததாகவும் சொல்லப் படுகின்றது.

இந்த நிலையில் 15 சதவீதம் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல் கட்டமாக ராமதாஸ் பேசியுள்ளார். பின்பு அந்த சதவீதத்தை குறைத்து கொண்டு வந்ததாகவும், ஆனால் சட்ட ரீதியாக எந்த மாதிரியான இட ஒதுக்கீடு வழங்க முடியுமோ அதை நிச்சயமாக அரசு வழங்கும் என்றும் அதிமுக அமைச்சர்கள் குழு பாமகவிற்கு உறுதி அளித்ததாக தெரிகின்றது.

குறிப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பின்பு உள் இட ஒதுக்கீடு குறித்து தெளிவான முடிவு எடுக்கலாம் என அமைச்சர் கூறியதாகவும், ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தலுக்கு முன்பாகவே உள் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் அதிமுக கூட்டணியில் பாமக தொடர முடியும் என்று தெளிவாகத் தெரிவித்து விட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் விவாதம் செல்கிறது.

ஏற்கனவே 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற ஒரு கமிஷனரின் பரிந்துரை இருப்பதாகவும், அந்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உத்தரவை அரசு வழங்க வேண்டும் என்ற ஒரு தகவல் பாமக குழுவால் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவாரத்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இன்று முதல்வர் மற்றும் ராமதாஸ் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |