Categories
மாநில செய்திகள்

முதல்ல இந்த கொடுமையை ஒழிக்க…. தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்….!!!!

தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தும் நடைமுறையை ஒழிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகள், சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், விஷவாயு தாக்கி உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சபாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்ல முடியாது என்ற மனநிலையை மாற்றி, அவர்கள் எந்த வேலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது அரசின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர் இதையடுத்து சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது.

எனவே அதை அதிகரித்து வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். அதன்பின்னர் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறையை முழுமையாக ஒழித்து அவற்றிற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Categories

Tech |