மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் 22 நாட்களில் வீட்டின் அருகே கிணறு தோண்டி தண்ணீர் வர வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரை சேர்ந்த ஜம்கேட் கிராமத்தை சேர்ந்தவர் ராம்தாஸ் போலே. இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவர்கள் கிராமத்தில் தண்ணீருக்கு மிகவும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் ராம்தாஸ் போலே வீட்டின் அருகே கிணறு தோண்டும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு அவரது மனைவியும் உறுதுணையாக இருந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அவர்களை கிண்டல் செய்தனர்.
ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிணறு தோண்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்ட தம்பதியினர் 20 நாட்களாக 22 அடி கிணறு தோன்றியுள்ளனர். விடா முயற்சிக்கு கிடைத்த பலனாக கிணற்றில் தண்ணீர் வர ஆரம்பித்தது. இதை பார்த்த ஊர் மக்கள் வியந்தனர். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கிணற்றை இன்னும் ஆழமாக தோண்டுவதற்கு அந்த தம்பதிகள் முடிவு செய்துள்ளனர். தண்ணீர் பஞ்சத்தை போக்க 22 நாட்களில் கிணறு தோண்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.