Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல தலையை விடுவோம்…! அப்பறம் பெருசா உடம்பு வரும்… பிஜேபி குறித்து நச்சுனு சொன்ன ராதாரவி …!!

வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, இந்த நலத்திட்ட உதவிகளை நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தான் செய்கின்றோம். உலகமே அறிந்த ஒரே ஒப்பற்ற தலைவர் வாஜ்பாய் அவர்கள், ஐயா மோடி அவர்கள், இயக்கம் பாரதிய ஜனதா இயக்கம். ஏனென்றால் உலக தலைவர் மாநாட்டிற்கு தலைமை பொறுப்பினை ஏற்றிருக்கும் ஐயா மோடிஜி அவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏதோ சீனிவாசபுரத்தில் மட்டும் கட்சி நடத்துபவர்கள் அல்ல பிஜேபி. சகோதரர் கராத்தே தியாகராஜன் செய்கிறார் என்றால் நான் ஏன் ஒத்துக்கொண்டு வரேன் என்றால், எனக்கு எங்கள் யூனியனில் தேர்தல் வேலை இருக்கு. ஏனென்றால் இது நிச்சயமாக திமுக அரசாங்கம் இல்லையா ? தப்பில்லையே நம்ம எதிர்க் கட்சில, அவர்களுக்கு  எதிர்ப்பானவர்கள், நான் தான் அங்கே தலைவர், எப்படி நடத்த விடுவார்கள்.

எதாவது பிரச்சனை பண்ணுவாங்க. அதனால நான் அங்கே இருக்கணும். இருந்தாலும் அதெல்லாம் விட்டுட்டு எதுக்கு இங்க வந்திருக்கேன் என்றால், நம்முடைய இயக்கமும் இன்னும் பெருசா வளரனும் இல்லையா, இந்த தேர்தலில் பாருங்க…. மதுரை மீட்டிங்ல கூட சொன்னேன். வெங்கல பாத்திர கடை உள்ளே ஒட்டகம் புகுந்த மாதிரி, முதலில் தலை மட்டும் தான் விடுவோம், பின்னாடி தான் உடம்பு பெருசா இருக்கும். அது மாதிரி தான் பிஜேபி. இப்போதான் 4 பேர் ஜெயித்து உள்ளே போயிருக்காங்க. பின்னாடி உடல் வரும். அடுத்த தேர்தலில் எல்லாம் பிஜேபி குறைந்தது 80 சீட்டுகளுக்கு பக்கத்தில் நெருங்கும் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |