Categories
தேசிய செய்திகள்

முதல்ல பிறந்த 2 குழந்தையும் இறந்து போச்சு… 3வது குழந்தையும் இறந்துடுமோ…? அச்சத்தில் 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு..!!!

இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த 5 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டை தாலுகா சாசலு கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ராஜபுரா கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஷில்பாவுக்கு 2 முறை பெண் குழந்தை பிறந்து 17 நாட்களுக்குள் அவை இரண்டும் உயிரிழந்தன. இதனால் ஷில்பா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் ஷில்பா 3-வது முறையாக கர்ப்பமானார். ஏற்கனவே 2 முறை குழந்தைகளும் பிறந்து இறந்து விட்டதால், 3-வதாக பிறக்கப்போகும் குழந்தையும் இறந்து விடுமோ என்று ஷில்பா மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இதுபற்றி தனது கணவரிடமும், உறவினர்களிடமும் கூறிவந்தார்.

இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷில்பா, வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்து இருக்குமோ என்றும் கவலைப்பட்டு கொண்டிருந்தார். கவலையோடு இருந்த ஷில்பா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து நேற்று காலை ஷில்பா, தூக்கில் தொங்குவதை பார்த்த அவரது கணவர் மல்லிகார்ஜூன் மற்றும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரேசாவே காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர் போலீசார் ஷில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே 2 குழந்தைகள் பிறந்து இறந்த நிலையில், 3-வது குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சத்தில் ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. 2 குழந்தைகளை இழந்த தாய், மூன்றாவது குழந்தையையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |