Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்ல ரஜினி…. இப்போ விஜய்…. மாறிமாறி விளாசல்… நல்லது நடந்தா சரி …!!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்ட்டார். இதனையடுத்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் சாத்தான்குளம் சாத்தான்களை தண்டிக்க வேண்டும் என்று கண்டன வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும் போது, கொரோனா ஒரு கொடிய வைரஸ்னு சொல்றாங்க. பயங்கரமான வைரஸ்னு சொல்றாங்க. ஆனா அதுல மாட்டிக்கிட்டு கூட பலர் உயிரோடு திரும்பி வந்திருக்காங்க. ஆனால் சாத்தான்குளம் விஷயத்தை கேள்விப்படும்போது, இப்படிப்பட்ட போலீஸ்காரர்களிடம் மாட்டினால் என்ன ஆகுறது ? என்று நினைத்து பார்க்கும்போதே ஈரக்குலை நடுங்குகிறது.

இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ்காரர்கள் கடவுள்களின் பிரதிகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதை மறக்கவும் முடியாது, மறக்கவும் கூடாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இப்படிப்பட்ட கொடுமையா ? இப்படிப்பட்ட கொடுமைக்காரங்களா ? இந்த சாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், அதுவும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்களை காப்பாற்ற நினைக்கும்  யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று நடிகர் விஜயின் தந்தை கண்டன வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த சுழலில் நடிகர் விஜயின் ரசிகர்கள் #ஒரேதலைவன்_விஜய் என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர், அதே போல நடிகர் ரஜினி பயன்படுத்திய #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தையை அவரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தந்தை கண்டனம் தெரிவித்து வீடியோவில் பேசி இருந்தாலும், ஒரே தலைவன் என்ற ஒரு தலைவன் விஜய் என்ற ஹெஷ்டக்கில் விஜய் ரசிகர்கள் அதிகமானோர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். காலையிலிருந்து சத்தியமாக விடக்கூடாது என்ற ரஜினியின் வார்த்தைகளில் பகிரப்பட்ட சாத்தான்குளம் சம்பவத்திற்கான நியாங்கள் , தற்போது விஜய் பெயரைக்கொண்ட ஹேஷ்டாக்  மூலம் பகிரப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இந்த வழக்கில் நீதி கிடைத்து,  தமிழ் சமூகத்திற்கு நல்லது நடந்தால் சரி என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |