ஜெயலலிதா GSTயை ஆதரிக்காமல் இருந்தாங்க, இப்போ இருக்கும் கூடிய அரசு பாஜகவுக்கு எடுபிடியாக இருக்குது என எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டுகின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் முதல்ல வந்து வரலாறு தெரிஞ்சுக்கணும். இல்ல சப்ஜெக்ட் அறிவாவது இருக்கணும், அதுவும் கிடையாது. காங்கிரஸ் – தி.மு.க ஆட்சி காலத்தில் VAT அறிமுகம் செய்தார்கள். மாநில வரி என இருந்ததை VAT என மத்திய அரசு மாற்றியது.
இதனால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பீடை தருவீர்களா ? என அம்மா கேட்டார்கள். அப்போது மத்திய அரசு, எவ்வளவு மாநிலத்துக்கு இழப்பீடு ஏற்பட்டாலும், நாங்க தந்துருவோம் சொன்னாங்க. மத்திய அரசு சொன்னதை நம்பி VAT வரிக்கு சென்றோம். இது அமலாகியதும் 5000 கோடி நிலுவையானது. காங்கிரஸ் – திமுக ஆட்சி காலத்தில் நிலுவையானதை, மாநில சுயாட்சி என்று வாய்கிழிய பேசும் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவை தொகையை அன்றைக்கு வாங்கி கொடுத்து இருக்கலாம்ல. ஆனால் அன்றைக்கு VAT கிடைக்கல.
இதனால் அம்மா GSTக்கு கண்டிஷன் போட்டாங்க. நாங்க VAT இழப்பீடு 5000 கோடி ரூபாய் ஏமாந்து விட்டோம். அப்போ மத்திய ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் அரசு எங்களை மோசம் பண்ணிட்டு. அதே போல நீங்களும் மோசம் பண்ணிடுவீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதனால் நீங்க ஒரு உத்தரவாதம் கொடுங்க. தமிழகத்தில் GSTயை அமல்படுத்தணும் என்றால் 14% இழப்பீடு சட்டமாக்கினால் மட்டுமே நாங்கள் GSTயை ஆதரிப்போம் என தெரிவித்ததை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு சட்டம் ஆக்கினார்கள்.
சட்டமாக மாற்றியதால் மட்டுமே 14% இழப்பீடு வந்து கொண்டு இருக்கின்றது. இதனை பெற்று கொடுத்ததற்காக இந்தியா முழுவதும் உள்ள அணைத்து மாநிலமும் நினைத்து பார்க்கவேண்டும் என்றால் அம்மாவை தான் நினைக்கணும் என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார்.