வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் என்சி 22 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது நாக தன்யாவை வைத்து புதிய திரைப்படத்தை எடுக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக என்சி 22 என பெயரிப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி செட்டி நடிக்கின்றார்.
மேலும் முக்கிய வேடத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், இப்படத்தில் பிரியாமணி அரசியல்வாதியாக நடிப்பதாகவும் இடைவேளைக்குப் பிறகு முதல்வராக மாறுவது போல் கதை அமைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் இப்படத்தில் பெண் முதலமைச்சரானால் என்னென்ன நன்மைகளை செய்ய முடியும் என்பது போல் அவரின் கதாபாத்திரம் அமைந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.