Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரிடம் பேசினேன்….! நம்மோட உரிமை போச்சு… வேதனையா இருக்குது…!!

கேரளா முதல்வரை சந்தித்து பேசியதை நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, தமிழக உரிமையை திமுக விட்டுவிட்டது என குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முல்லை பெரியாறு பிரச்சனை வாழ்வாதார பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை என்பது இன்றைக்கு நீண்டகால ஒரு பிரச்சனை, ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனை, விவசாயிகளுக்கு வாழ்வு அளிக்கக்கூடிய அணை முல்லைப் பெரியாறு அணை. அதுமட்டுமல்ல அந்த ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதும் முல்லைப் பெரியாறு அணை தான். மாண்புமிகு அம்மா அவர்கள் சட்ட போராட்டம் நடத்தி 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தோம், அதுமட்டுமில்ல 142 லிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றம் இன்றைக்கு அந்த அணையை பலப்படுத்த வேண்டும் என்று உத்தரவு தீர்ப்பு வழங்கியது.

அதனடிப்படையில் மாண்புமிகு அம்மா அரசு 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கேரள அரசு அந்த பணியை செய்யாமல் தடை செய்தது, அந்த கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. அப்படி இருந்தும்கூட மாண்புமிகு அம்மாவுடைய அரசின் கடுமையான முயற்சியின் காரணமாக தடுப்பு சுவர் கட்டப்பட்டது, பேபி அணையெல்லாம் சீர் செய்யப்பட்டது, அணையில் இருந்த விரிசல் எல்லாம் சரி செய்யப்பட்டது.

அதோடு அங்கு இருக்கின்ற பேபி அணை கீழே இருக்கின்ற மரம் வெட்ட வேண்டும் என்ற முயற்சியில் செய்தோம், அங்கே மரம் வெட்ட முயற்சி செய்தபோது அந்த அதிகாரி மீது எல்லாம் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமை இருந்தாலும் கூட கேரள முதலமைச்சரை நான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இதெல்லாம் ஒரு இணக்கமான ஒரு உறவை மேற்கொள்ள வேண்டும், இரண்டு மாநிலம் பேசித் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு வேதனையான சம்பவம். கேரளாவில் இருக்கின்ற அமைச்சர்கள் வந்து, தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ள முல்லைப் பெரியாறு அணையை அந்த நீர் தேக்கத்தில் இருந்த கதவைத் திறப்பது ஒரு வேதனைக்குரிய ஒரு விஷயம்.

ஆகவே நம்முடைய உரிமையை இந்த அரசு விட்டுக் கொடுத்தது என்று மக்கள் சந்தேகிக்கின்றனர், விவசாயிகள் சந்தேகிக்கிறார்கள். அதை மக்களிடையே தெரிவிப்பதற்கும், மக்களிடையே இருக்கின்ற அச்சத்தை போக்குவதற்கும் இன்றைக்கு நம்முடைய உரிமையை விட்டுக் கொடுத்த திராவிட முன்னேற்ற கழக அரசை கண்டித்து தான் ஐந்து மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் தேனி மாவட்டத்திலும், மற்ற இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தனிமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |