Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் அதிரடி நடவடிக்கை…  டெல்லிக்கு பறந்த போன் கால்… பிரதமர் என்ன சொன்னார்…?

மழை, வெள்ளம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி டெல்லிக்கு போன் செய்து பேசி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூ,ர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நானும் எனது அமைச்சர் குழுவினரும் நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இதுவரை 17 லட்ச்சது 40 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில்  68000 ஹெக்டர் பரப்பில் இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இயன்ற அளவு அவற்றை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிராமம் வாரியாக முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. உழவர்களைக் காக்கும் அரசு நமது திமுக அரசு. நடப்பு வடகிழக்கு பருவமழையின் காரணமாக நான்கு நாட்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. இதனை எதிர்நோக்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர் மேலாண்மை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டு, நிரந்தர திட்டத்திற்கு வழிவகை செய்யப்படும்.

வரும் 15ம் தேதியுடன் விவசாயிகள் காப்பீட்டுக்கு  பிரீமியம் செலுத்தும் தேதி முடிவடைய உள்ளது. இதனை நீட்டிக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மேலும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள காப்பீடு தொகையையும் விடுவிக்க பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் கேட்டுள்ளேன் என்று கூறினார். அவரும் விரைவில் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்” என்று கூறினார்.

Categories

Tech |