கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டமானது, கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட திமுக அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதாவது, வருகிற 1-ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின், முதன் முதலாக கரூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் முதல்வருக்கு, கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் தாந்தோன்றிமலை அரசு பயணியர் விடுதியில் முதல்வர் தங்க உள்ளார். இதனை தொடர்ந்து 2-ஆம் தேதி திருமாநிலையூர் என்ற பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மேலும் முதல்வர் வருகின்ற வழி எங்கிலும், 1 லட்சம் பேர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.