தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கனவு திட்டமான சிங்காரச் சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டதை அடுத்து “சிங்காரச் சென்னை 2.0” ஆக புதுப்பொலிவு பெற்றுள்ளது. அதன்படி சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சுகாதாரத்தை பேணும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதற்காக அங்கு பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.