தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 12 பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். அதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் சிவாஜி மணி மண்டபத்தில் நேரில் மரியாதை செலுத்தினார்.
அன்று அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதனால் முதல்வரின் பாதுகாப்புக்காக சென்ற வாகனங்களின் எண்ணிக்கையை 6 வாகனங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் முதல்வர் வாகனம் செல்லும் போது வேறு எந்த வாகனத்தையும் நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்வரின் வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கும், போக்குவரத்தை சீர்அமைப்பதற்கு முடிவு செய்வதற்கும், தமிழக அரசை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மேலும் முதல்வரின் பாதுகாப்பிற்கு எந்த சமரசமும் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.