Categories
தேசிய செய்திகள்

முதல்வரின் சூப்பர் அறிவிப்பு….. இன்று முதல் அமலாகிறது….!!!!

கேரளாவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை நீக்கவும், பெண்கள் குறித்த விபரீத எண்ணங்களை அடிப்படை கல்வியில் இருந்தே மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை மற்றும் பொது இடங்களில் நடக்கும் வன்முறை ஆகியவற்றை தடுக்க பிங் பாதுகாப்பு திட்டம் இன்றுமுதல் கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் நன்கு பயிற்சி பெற்ற பெண் போலீஸ் அதிகாரிகள் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தவறாக நடந்து கொள்பவர்களை கண்காணித்து பிடிப்பார்கள்.

Categories

Tech |