Categories
தேசிய செய்திகள்

“முதல்வரின் சொந்த தொகுதிக்கு செக் வைத்த நீதிமன்றம்….!!” அப்படி என்னதான் நடந்துச்சு…??

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்போர் சங்கம் சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பிளாஸ்டிக் மீதான தடை தொடரும் என தீர்ப்பளித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரி புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் மேல் முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் போது அதை தயாரிப்பது மற்றும் உருவாக்கம் உட்பட ஆரம்பக்கட்டத்திலேயே அதனை நிறுத்த வேண்டுமென கூறியதோடு, வெளிமாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் கொண்டுவரப்பட்டு பயன்படுத்திக்கொள்ளலாம் தமிழக அரசு கூறியுள்ளது இது எந்த வகையில் பொருத்தமான இருக்கும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் எந்த மாநிலங்களில் இருந்தும் அதனை கொள்முதல் செய்யக்கூடாது எனக் கூறினார். இதன் முதல் கட்டமாக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட வேண்டும் எனவும், இது குறித்த விரிவான அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |