முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டத்தில் பாஜக தோல்வி பெற்றது. இதனால் எடியூரப்பா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் ஆளும் பாஜக சிந்தகி தொகுதியில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல்லில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் எடியூரப்பாவுக்கு பெரிய முக்கியத்துவத்தை பாஜக தலைமை தரவில்லை என்பதால் தான் பாஜக தோல்வி அடைந்ததாக கூறி எடியூரப்பா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில் கடந்த செப்டம்பர் மாதம் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடியூரப்பா திட்டமிட்டார். அதற்கு கட்சி தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் பாஜக ஒரு தொகுதியில் தோற்ற நிலையில் தனது செயல்பாட்டை கையிலெடுத்த தொடங்கியுள்ளார் எடியூரப்பா. அதேசமயம் இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் மானே செய்த மக்கள் பணிகள் காரணமாக அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது பாஜகவுக்கு எதிரான அதிருப்தி இல்லை’ என்று கூறி தப்பியோடியுள்ளார். தற்போது நடைபெற்ற தேர்தலானது பசவராஜ் பொம்மை தனது ஆதரவு வட்டத்தை அதிகரிக்க வேண்டிய தேவையையும் இது சுட்டிக் காட்டுகிறது.