இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர் ஜெர்மன் விமானம் ஒன்றில் இருந்து இறக்கி விடப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வரான பகவந்த் மான் எட்டு நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதற்கு காரணம் குடிபோதையில் இருந்த அவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தகவலை பகவந்த்மான் சார்ந்த ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இப்படி எதிர்க்கட்சியினர் புரளிகளை கிளப்பி விடுவதாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கூறியுள்ளார். இதற்கிடையே முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அவர் விமானத்தில் ஏறவில்லை எனவும் பஞ்சாப் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Categories