தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் லைகா புரோடக்சன்ஸ் அல்லி ராஜா சுபாஸ்கரன் சார்பில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண பணிக்காக பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடிக்கான காசோலையை லைகா நிர்வாகி GKM தமிழ் குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் வழங்கினர்.