Categories
மாநில செய்திகள்

முதல்வரின் நிவாரண நிதிக்கு…. வில்லேஜ் குக்கிங் சேனல் ரூ.10 லட்சம் நிதி….!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஆன Village cooking channel முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கியுள்ளது. மேலும் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்சை கொண்ட முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையையும் வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது.

Categories

Tech |