தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை ஸ்ரீ வல்லபாச்சார்யா வித்யா சபா சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி வழங்கப்பட்டது. தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சபாவின் உறுப்பினர் ஹரிதாஸ் வழங்கினார். சபா உறுப்பினர் எஸ்.ஆர்.தாமணி மற்றும் செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.