முதல்வரின் குறை தீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு “முதல்வரின் முகவரி” என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய அமைப்புகள் இதுவரை தனித்தனியாக செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தத் துறைகள் அனைத்தும் ஒரே துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறைக்கு ‘முதல்வரின் முகவரி’ என்று பெயரிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.