Categories
அரசியல்

“முதல்வரின் முன்னாள் செயலாளருக்கு எல்லாம் தெரியும்….!!” ஸ்வப்னா சுரேஷ் பகீர்….!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரை பயன்படுத்தி அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 13.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுவப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரி விஜயனின் செயலாளரான சிவசங்கர் உடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிவசங்கர், பிரனாய் விஜயனின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தங்கக் கடத்தல் விவகாரம் பற்றிய அனைத்தும் சிவசங்கருக்கு தெரியும் ஆனால் அவர் எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொள்கிறார். என்னை பலிகொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என சிலர் என்று என எண்ணுகின்றனர் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டேன்.” என அவர் கூறியுள்ளார். முன்னதாக “மூன்று வருடங்களாக எனக்கு தோழியாக இருந்த சொப்னா சுரேஷுக்கு இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் பங்கு உண்டு என்பது கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.!” சிவசங்கர் தனது சுயசரிதையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |