தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்யப்பட்ட புதிய சாதனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ரூபாய் 25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித்தொகை, இறப்பு நிதியுதவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
“மயிலாடுதுறையில் தேர்தலுக்கு முன் லட்சக்கணக்கான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில் 3.5 லட்சம் மனுக்களுக்கு முதல்வர் தீர்வு கண்டுள்ளார். அரசு மருத்துவமனையில் 4 டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனையும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 23 கோடி ரூபாய் செலவில் நவீன அறுவை சிகிச்சை வசதியுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.