Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வருக்கான பாதுகாப்பு வாபஸ் ….!!

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நாராயணசாமிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தனது முதலமைச்சர் பொறுப்பை நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் அவர் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தையும் திரும்ப ஒப்படைத்தார்.

குறிப்பாக தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டபோது தனது இரண்டு கான்வாய் வாகனங்களில் ஒன்றை வேண்டாம் என தெரிவித்திருந்தார். ஒரு வாகனத்தை மட்டுமே அவர் பயன்படுத்தி வந்து கொண்டிருந்தார். இப்படியான ஒரு சூழலில் இன்றைக்கு தமிழிசையை சந்தித்து தனது ராஜினாமாவை அளித்ததால், இல்லத்திற்கு வந்த நாராயணசாமி தனக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த பாதுகாவலர்களிடம் நீங்கள் இவ்வளவு நாட்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்து,

அவர்களை எனக்கு பாதுகாப்பு வேண்டாம்,  நீங்கள் செல்லுங்கள் என தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்கியகான்வாய் வாகனங்களும் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அதே போன்று அங்கு கடந்த 5 ஆண்டுகளாக முதல்வருக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்த 57 பாதுகாவலர்களும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி விடை பெற்று இருக்கின்றார்கள்.

Categories

Tech |