Categories
அரசியல்

முதல்வருக்கு அண்ணாமலை கொடுத்த வார்னிங்…!! கொந்தளிப்பில் உடன்பிறப்புகள்…!!

விவசாயிகளால் நடத்தப்பட்ட கீழ்பவானி நீர்ப்பாசன சபையை திமுக சதி செய்து கைப்பற்றி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு, கரூர், பவானி ஆகிய மாவட்டங்களுக்கு நதி நீர் பாசனம் பல ஆண்டுகளாக நீர்ப்பாசன சபையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில் நீர் மேலாண்மையை கவனிக்க மத்திய அரசு 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் 750 கோடி ரூபாய் பவானி மாவட்டத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட நீர்ப்பாசன சபைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த நிதி கிடைத்தவுடன் இதனை கைப்பற்ற திமுக மாபெரும் சதி செய்துள்ளது. அதன்படி மார்ச் 14ஆம் தேதி திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்டு 18ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு அவசர அவசரமாக குறிப்பிட்ட சில வேட்புமனுக்கள் மட்டும் பெறப்பட்டுள்ளது மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

விவசாயத்திற்கு மகா சமைக்கும் சம்பந்தமில்லாத சில நபர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்துள்ளனர். இதனால் உண்மையான விவசாயிகளிடம் இருந்த மகாசபை தற்போது திமுகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.!” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |