தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாத 15 ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று காரணமாக கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் வருகை குறித்து அமைத்து செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வருகின்ற 23ஆம் தேதி ரூ.1,50,000 க்கு மேற்பட்டோர் முதலமைச்சருக்கு மிகவும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனையடுத்து வருகின்ற 24 ஆம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் 1,06,641 பேருக்கு நல திட்டங்களை வழங்குகிறார். அதன் பிறகு புதிய கட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து. 100 யூனிட் மின்சாரம் ஏழை எளியகளுக்கு வழங்கப்பட்டது. அதனை போல தான் மடி கணினி, சைக்கிள் ஆகியவை முக்கிய திட்டங்கள் இலவச அடிதட்டு மக்களை கைகோர்த்து அழைத்து செல்கிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். மக்களின் வாழ்க்கை தர மேம்படுத்துவதை தமிழக அரசின் இலக்கு இலவச திட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால் இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களை அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இரட்டை வேஷங்களை தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள். இதனையடுத்து முதல்வர் வருகைக்கு நாங்கள் கோடிகள் பேனர்கள் வைப்பது இல்லை. முதல்வருக்காக நாங்கள் போஸ்டர் ஒட்டியதற்கு அந்த போஸ்டரின் மீது போஸ்டர் ஒட்டும் என சொல்லுவது எப்படி? என கேள்வி எழுப்பினார். போஸ்டர் ஒட்டு விவகாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் தோனியில் ஒரு கூட்டம் செயல்படுகிறது. அவர்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவினர் தங்களின் இருப்பை காட்ட செயல்படுகின்றனர் இனிமேல் யாராவது கோவை மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது. வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.