Categories
தேசிய செய்திகள்

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டில் தன்னை தானே தனிமை…!!!

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பாரபட்சம் பாராமல் அனைவரையும் கொரோனா தாக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை பல்வேறு முக்கிய பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் திரிவேந்திர சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதன் காரணமாக முதல்வர் தலைமையில் இன்று நடைபெற இருந்த அரசின் அலுவலக கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவருக்கு முன்னதாக அவரின் உதவியாளருக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், முதல்வர் மூன்று நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தார். அவருடைய தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |