தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாளை பசும்பொன் நகருக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எனக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதனால் தான் மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக தற்போது பசும்பொன் நகருக்கு யார் செல்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். இவருடன் மூத்த அமைச்சர்கள் ஐ. பெரிய சாமி, கே.என் நேரு, துரைமுருகன் போன்றோரும் உடன் செல்கின்றனர். மேலும் பசும்பொன் நகருக்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.