தமிழக சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்திருந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலினின் வயது குறித்து பேசுகையில்,அவர் வாரம்தோறும் சைக்கிள் ஓட்டுவது தான் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக முதல்வரிடம் பேசிய ராகுல், அடுத்த முறை வரும்போது ஸ்டாலினுடன் தானும் சேர்ந்து சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று தம் விருப்பத்தை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.