Categories
மாநில செய்திகள்

“முதல்வரே”… உங்கள் பார்வை எங்கள் மீதும் விழும் என்று நம்புகிறோம்….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். வாழ்த்துக்கள்.  இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக ஊதியம் தரப்படுவதை நம் முதல்வர் விரும்ப மாட்டார்கள் என்று கருதுகிறோம். எனவே இந்த நேரத்தில் நம் முதல்வரின் பார்வை எங்கள் மீது விழ வேண்டும்.

இது மக்களின் அரசு மட்டுமன்றி மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் அரசாகவும் இருக்கும் என டாக்டர்கள் தினத்தன்று முதல்வர் சூளுரைத்தார்கள். எனவே இப்போது நம் முதல்வரின் பார்வை எங்கள் மீது விழ வேண்டும். டாக்டர் கலைஞரை பெருமைப்படுத்தி வரும் நம் முதல்வரின் பார்வை இப்போது எங்கள் மீது விழ வேண்டும். இதன் மூலம் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவர்கள் இன்னமும் உற்சாகமாக பணி செய்ய வழிவகுக்கும் என்பதை உறுதியுடனும், பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |