தமிழக முதல்வர் பழனிசாமி அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யை திமுக எம்பி ஆ.ராசா அவதூறாக பேசினார். 2ஜி மேல்முறையீட்டு வழக்கு பற்றி விவாதிக்க கோட்டைக்கு வாருங்கள் என்று முதலமைச்சருக்கு சவால் விடுத்தார். அதனால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஆவேசம் அடைந்தனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவதூறாக விமர்சித்து புகாரில் ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், 153, 505 (1)(b) ஆகிய இரண்டு பிரிவுகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி ஆதாயம் தேடுதல், குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுதல் ஆகியவற்றின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.