மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றபோது கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நாராயணன் ரானே பேசுகையில், “எத்தனையாவது வருடம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று முதல்வருக்கு தெரியாதது அவமானமாக இருக்கிறது. அந்த இடத்தில் மட்டும் நான் இருந்திருந்தால் அவரை கன்னத்தில் அறைந்து இருப்பேன் என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தின உரையின்போது எத்தனையாவது ஆண்டு பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பது முதல்வர் மறந்துவிட்டதால் தமது உதவியாளரை கேட்டு தெரிந்து கொண்டார் என்று அம்மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா எம்பி நாயக், மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பிறகு நாராயணன் ரானே தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.
எங்களது தலைவர்களையும் அவர் விமர்சிக்கிறார். எனவே அவரை பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிவசேனா தொண்டர்கள் நாராயணன் ரானேவின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி முதல்வரை அவதூறாக பேசியதாக அவரைக் கைது செய்யவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.