தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைதியாக இருக்கச் சொல்லி உளவுத்துறை அவருக்கு ஒரு நோட் போட்டு கொடுத்துள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு கட்சியினரையும் விமர்சித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதன்படி தேர்தல் பிரசாரம் செய்தபோது, நான் சசிகலாவால் முதல்வர் ஆகவில்லை மக்களால் முதல்வர் ஆனேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நான் சசிகலாவால் முதல்வர் ஆகவில்லை மக்களால் முதல்வர் ஆணின் எனக் கூறுவதால் மக்கள் மத்தியில் உங்களுக்கு நெகட்டிவ் இமேஜ் உருவாகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் சசிகலாவின் சமூகத்தினரும் உங்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே வரும் காலங்களில் சசிகலாவை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறை நோட் போட்டுக்கொடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் கடந்த 2 வாரமாக அவர் சசிகலாவை பற்றி பேசவில்லையாம்.