Categories
தேசிய செய்திகள்

முதல்வரை கொசு கடித்ததால்….. அடுத்த நொடியே அதிகாரி சஸ்பெண்ட்…..!!

மத்திய பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வீட்டில் சிறப்பு விருந்தினராக அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சவுகான் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டி தேங்கிய நீர் நிறைந்து வழிந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பொது துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் சிவராஜ் சவுகான் வருவது ஏற்கனவே அந்த அதிகாரிக்கு தெரியும் எனவும், அரசு தங்கும் இடத்தை தூய்மையாக பராமரிக்க தவறிவிட்டதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்குமிடத்தில் கொசு வலைகள் கூட இல்லை என சிவராஜ் சவுகான் தெரிவித்துள்ளார். இதையடுத்து நள்ளிரவில் 2.30 மணியளவில் அறை முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தொட்டியில் இருந்து தண்ணீர் வழிந்து கொண்டு இருந்ததால் சிவராஜ் சவுகான் எரிச்சல் அடைந்து தானே சென்று மோட்டரை அணைத்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி பாபுலால் குப்தா தன்னுடைய கடமையை செய்ய தவறி விட்டதால் மாவட்டத்தின் மானம் கப்பலேறி விட்டதாக நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வருக்கு கொசு கடித்த அடுத்த நொடியே ஒரு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஆனால் அந்த மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்பது குறித்து இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்பது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

Categories

Tech |