Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் சூரி… நடந்தது என்ன…!!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை வாழ்த்தும் விதமாக நடிகர் சூரி முதலமைச்சரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்திற்கான  40 லட்சம் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுத்ததாக  நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .மேலும் அவர்கள் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூபாய்  2.70  கோடி பணம் வாங்கி ஏமாற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நடிகர் சூரி என்று முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

Categories

Tech |