நாட்டின் 75 வது சுதந்திர தின விழா காலையில திங்கட்கிழமை அன்று நாடு முழுவது உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இனிப்பான செய்தியாக இருக்கட்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதாவது 31% ஆக இருக்கும் அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையானது என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து DA உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறை தானே, அதனை ஏன் முதல்வர் தமது சுதந்திர தின உரையில் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான பொதுமக்களின் வெறுப்பே அதிகரிக்க செய்வது தானே நோக்கமாக இருக்க்கும் என்று வேறென்ன இருக்க முடியும் என்று விமர்சனத்தை சில அரசு ஊழியர்கள் முதல்வர் மீது வைத்தனர்.
அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தான் DA உயர்வு கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களை விட அகவிலைப்படி ஆறு மாத பின் தங்கிய உயர்வு, இது எப்படி இணையான அகவிலைபடி உயர்வாக இருக்க முடியும் என்று துணை கேள்வியே அரசு பணியாளர்கள் எழுப்பி உள்ளனர். இப்படி எல்லாம் கேள்வி எழுப்ப அரசு ஊழியர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை தங்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு போன்ற சலுகைகள் கார்ப்பரேட், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு வழங்கப்படுதில்லை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனையடுத்து 2%, 3% என ஒற்றை இலக்க விகிதத்தில் அறிவிக்கப்பட அகவிலைப்படி உயர்வு என்பது தங்களது அடிப்படை ஊதியத்தில் தான் கணக்கிடப்பட்டு தரப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும் ஊதிய உயர்வை அதிகாரிகளின் மொத்த ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. இந்த நுட்பமான வேறுபாட்டை கருத்தில் கொள்ளாமல் DA உயர்வு, தீபாவளி, பொங்கல் போனஸ் அது இதுவென தங்களுக்கு எப்போது பார்த்தாலும் அரசு சலுகைகளை வாரி வழங்கி வருவதாக தவறான ஒரு கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இருக்கதான் செய்கிறது என்று அரசு ஊழியர்கள் தன்னிலை விளக்கம் அளிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து இவ்ளோ பேசுகிறீர்களே! தனியா நிறுவன பணியாளர்கள் போன்று மாதாந்திர டார்கெட், காலாண்டு, அரையாண்டு பணி மதிப்பீடு போன்ற பணித்திறனை மேம்படுத்து வழிமுறைகள் ஏதேனும் அரசு துறைகளில் கடைபிடிக்கப்படுகிறதா எனக் கேட்டால் அதற்கு அவர்களிடம் ஆக்கப்பூர்வமான பதில் இல்லை. எனவே பழைய ஓய்வூதிய திட்டம் முன் தேதி போன்றவை எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இணையாக பணியாற்றுவதுதான், தங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் அரசுக்கு செய்யும் ஆகச்சிறந்த கைமாறாக இருக்க முடியும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.