Categories
மாநில செய்திகள்

முதல்வர் அவசர ஆலோசனை…. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.இந்நிலையில் எம் பி சி பிரிவில் இருந்த வன்னிய சமூகத்திற்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எம் பி சி பிரிவில் உள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா?, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு தர முடியுமா? என்ற கேள்வி எழுப்பி, 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார். ஆலோசனைக்குப் பிறகு வன்னியர்களுக்கு 10.5%இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |