Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஆக வேண்டும் ஆனால்…. மறுபடியும் லீவ்…. அப்ப நம்ம ராமதாஸ் கனவு என்னாவது….?

குளிர்கால கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாளில் தமிழக எம்பி அன்புமணி ராமதாஸ் மட்டும் லீவு எடுத்துள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளே 3 வேளாண் சட்டங்கள் திருத்த மசோதா இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தேசிய மற்றும் மாநிலங்கள் சார்ந்த பல விவாதங்கள் கேள்விகள் எழுப்பப்பட்டு பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 18 பேரில் கனிமொழி, தம்பிதுரை, வைகோ, நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், அந்தியூர் செல்வராஜ், ஜி கே வாசன், ராஜேஷ்குமார், முகமது அப்துல்லா, சண்முகம், சந்திரசேகரன், இளங்கோவன் உள்ளிட்ட 17 பேர் மட்டும் முதல் இரண்டு நாட்களும் வருகை புரிந்தனர்.

ஆனால் பாமக மாநிலங்களவை எம்பி அன்புமணி ராமதாஸ் மட்டும் வரவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இவர் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் இருப்பது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது மட்டுமல்ல இதற்கு முன்பாகவும் நாடாளுமன்ற கூட்டத்தில் இவரின் வருகை பதிவு மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் வாயிலாக நடந்த பொதுக்கூட்டத்தில் என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும் என்று ராமதாஸ் மிகவும் உருக்கமாக பேசினார்.

அதற்கு ஏற்ப மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க கூடிய நாடாளுமன்றத்தில் தவறாமல் செல்ல வேண்டும் என்பதே ஒரு தலைவரின் பண்பாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை அன்புமணி மிகவும் சோம்பலாக இருப்பது அவருக்கு மட்டுமல்ல பாமகவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சித்து வருகின்றனர்.

 

Categories

Tech |