Categories
அரசியல்

முதல்வர் எடுக்க உள்ள மிக முக்கிய முடிவு….!! உண்மையை உடைத்த அமைச்சர்…!!

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு இரண்டு மினி பேருந்துகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கோயில் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

பாஜக தலைவர் முடிந்தால் என்னை கைது செய்யப் பாருங்கள் என்று சவால் விடுத்து இருக்கிறார். ஒரு படத்தில் வடிவேலு நானும் ரவுடி தான் …!! நான் ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன்…. என்று கூறியிருப்பார். அதுபோல தான் பாஜக தலைவரின் பேச்சும். அவருடைய வயதை தாண்டி 100 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திராவிட கட்சியான திமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு என்னைக் கைது செய்யுங்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறார் .” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |