துறை ரீதியான தனது வெளிப்படையான பேச்சுக்களால் அவ்வபோது பழனிவேல் தியாகராஜன் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாகும். அமைச்சராக பொறுப்பேற்ற பின் தான் பங்கேற்ற முதல் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ஒன்றிய அரசு என புதிய சொல்லாடலில் அழைத்து தேசிய அளவில் கவனத்தைப் பெற்ற பி டி ஆர் பெட்ரோல், டீசல் மீதான வரி விதித்து அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசு கடுமையாக சாடியுள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் ரசிக்கும் படியாக இல்லை எனவும் இவரது பேச்சு மற்ற மாநில நிதி அமைச்சர்களை தூண்டி விடுவதாக இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சில மாதங்களுக்கு முன் ரிப்போர்ட் வந்துள்ளதாம்.
அதுமட்டுமல்லாமல் பிடிஆர் ஐ மாநில நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றால் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதிகள் உரிய காலத்தில் கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் நிலையில் ஸ்டாலினுக்கு அப்போதே அறிவுறுத்தப்பட்டதாம். ஆனால் அப்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதனால் முதல்வர் அதைப்பற்றி பேசவில்லை. தேர்தல் முடிந்த பின் ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்காததால் பிடிஆர் ஆல் ஸ்டாலினுக்கும் திமுக அரசுக்கும் தற்போது வேறு விதத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி மிகவும் முக்கியமானதாகும். தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை திமுக அரசு இன்னும் எடுக்காதது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசின் மீது தங்களது அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்து வருகின்றார்.
இந்த சூழலில் அரசின் மீதான கோபத்தை தூண்டுவதாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜரின் பேச்சு அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள் ஊதியத்திற்காக மட்டும் அரசு மாதம் தோறும் இவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு டிஏ போன்ற சலுகைகளும் அளிக்க வேண்டி இருக்கிறது. மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் போன்ற பிடிஆரின் பேச்சை கேட்டு அரசு ஊழியர்கள் கொந்தளித்து போய் இருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். இதன் வெளிப்பாடாகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தமிழக நிதி அரசை கண்டித்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் மாநிலம் தழுவிய போராட்டத்தை அண்மையில் அறிவித்திருந்தது. மேலும் கூட்டமைப்பின் நிர்வாகிகளை முதல்வர் அழைத்து பேசியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய விதத்தில் வேசி வரும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருடன் சந்திப்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி இருக்கின்றனர். அவர்களின் இந்த கோரிக்கையை கவனமாக கேட்ட முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி ஒப்பீட்டளவில் அதிமுகவை விட திமுகவிற்கு அதிகமாக இருந்து வருகின்றது. மேலும் பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தால் இந்த வாக்கு வங்கி குறைந்து விடுமோ என்று அச்சத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கும் சூழலில் அரசு ஊழியர்களுக்கு எதிரான பிடிஆர் சர்ச்சை கருத்துக்கள் திமுகவின் வாக்கு வங்கிக்கு உலை வைக்கும் படி அமைந்திருக்கின்றதோ என்னும் அச்சமும் ஸ்டாலினுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது. அதனால் இந்த முறை பி டி ஆரா அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கியா? என முடியும் எடுக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டிருக்கிறதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.