Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் கனவு காணும்…. 3 முக்கிய அமைச்சர்கள்…? டென்ஷனில் எடப்பாடி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. அதேபோல அதிமுக விருப்ப மனுக்கள் வினியோகிப்பது, தொண்டர்கள் அறிவிப்புகளும் நிகழ்கிறது.

இதையடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் அமமுக நோக்கி நகர்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு வாய்ப்பு உள்ளது என்பது முதல்வருக்கு தெரியும். ஆனால் முக்கிய அமைச்சர்கள் சிலரும் சசிகலாவின் ஆதரவாக இருப்பதாக தகவல் போயுள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்ட போதும் சிகலாவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி, ஜெயகுமார், போன்ற அமைச்சர்கள் பேசி வரும் நிலையில் ஓபிஎஸ் மட்டும் மவுனம் சாதித்து வருகிறார். இதனால் சசிகலா ஆதரவு மனநிலையில் இருக்கிறரோ? என்ற சந்தேகம் எடப்பாடி தரப்புக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவரும் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வந்து தன்னை முதல்வர் வேட்பாளராக அல்லது துணைமுதல்வர் வேட்பாளராக அறிவிக்க செய்யலாம் என்ற திட்டத்தோடு இருப்பதாகவும் முதல்வரை காதுக்கு எட்டியுள்ளது. இதையடுத்து விளம்பர நாயகன் எஸ்பி வேலுசாமி சசிகலா ஆதரவு மனநிலையில் இருப்பதாக ஒரு தகவல் வெளிவருகின்றது. ஓபிஎஸ் ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிகராக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையி எஸ். பி வேலுமணி தன்னை முன்னிறுத்தி அதிக விளம்பரத்தை கொடுத்து வருகிறார். ஐம்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு சாதனை படைத்ததாக விளம்பரம் கொடுக்கும் எஸ்.பி வேலுமணியை எடப்பாடி பழனிசாமி கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஐவரும் முதல்வர் வேட்பாளருக்கு முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அரசியலில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |