Categories
மாநில செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்….. “ஒட்ட நிதி கொடுத்தது பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர்”…. ஐகோர்ட்டில் போலீசார் தகவல்..!!

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதன் பின்னணியில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர் உள்ளதாக ஐகோர்ட்டில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் தேதி வட சென்னையின் பல்வேறு பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக துறைமுகம் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் அளித்த புகார் அடிப்படையில், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி மண்ணடியை சேர்ந்த ரமேஷ், ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகாரில்  பாஜகவினுடைய தமிழக தலைவர் அண்ணாமலையின்  உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிக்கு நிதி உதவி கொடுத்ததற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்.

மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு  ஒத்திவைத்த நீதிபதி அதுவரை முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தவர்களை (ஆறுமுகம், ராஜேஷ்) கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய வழக்கில் இதுவரை அண்ணாமலையின்  உதவியாளர் கிருஷ்ணகுமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Categories

Tech |